Monday, 28 March 2016

ஒரு கொலையாளியின் இறுதிச் சடங்கு

என் தந்தை, 2008-லிருந்து 2011-ல் படுகொலை செய்யப்படும் வரை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். அந்தச் சமயத்தில் பாகிஸ்தானின் மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண் ஒருவருக்கு ஆதரவாக என் தந்தை இருந்தார். மதச் சிறுபான்மையினர் மீது வன்முறையை ஏவுவதற்கு இது போன்ற மத நிந்தனைச் சட்டங்களைத்தான் பாகிஸ்தானின் பெரும்பான்மை சன்னி முஸ்லிம்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். என் தந்தை இந்தச் சட்டங்களுக்கு எதிராகப் பேசியதால், தொலைக்காட்சி நெறியாளர்களின் தீர்ப்புகளுக்கு இலக்காகவும், முல்லாக்களின் கடுங்கோபத்துக்கு இலக்காகவும் ஆனார். பலருடைய பார்வையில் அவரும் ஒரு மத நிந்தனையாளராக ஆனார். ஜனவரி மாதத்தின் பிற்பகல் ஒன்றில், தனது மெய்க்காவலர் மாலிக் மும்தாஜ் ஹுசைன் காத்ரியாலேயே என் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒரே நாளில் பாகிஸ்தானில் ஹீரோவானார் காத்ரி. இஸ்லாமாபாதில் உள்ள ஒரு மசூதிக்கு அவரது பெயரைச் சூட்டினார்கள். சிறையில் இருந்த அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்கு ஏராளமான மக்கள் வந்தார்கள். இதனால் நீதி வழங்கலில் தாமதம் ஏற்பட்டது. காத்ரிக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்த நீதிபதி, தன் உயிருக்கு ஆபத்து என்று நாட்டை விட்டுத் தப்பித்துச் சென்றுவிட்டார். ஆகவே, என் தந்தையைக் கொன்றவர் தண்டிக்கப்படுவது சாத்தியமே இல்லை என்று நினைத்தேன்.

காத்ரியின் மரண தண்டனை
அதற்குப் பிறகு, கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் அரசின் புதிய உறுதிப்பாடு நம்பிக்கைக் கீற்றை வெளிப்படுத்தியது. காத்ரியின் மரண தண்டனையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதத்தில் உறுதிப்படுத்தியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபரிடம் கொலையாளி செய்திருந்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. சட்டப்படி பார்த்தால், தான் தவறு செய்துவிட்டேன் என்று காத்ரி ஒப்புக்கொண்டதுபோல்தான் அந்தக் கருணை மனு. அப்புறம், கடந்த மாதத்தின் இறுதியில் இந்தச் செய்தி வந்தது: மாலிக் மும்தாஜ் ஹுசைன் காத்ரியை பாகிஸ்தான் தூக்கிலிட்டுவிட்டது. இந்த விஷயத்தை பாகிஸ்தான் எப்படி எடுத்துக்கொள்ளும், அதாவது அரசு இல்லை, பாகிஸ்தான் நாட்டின் மக்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.

லாகூரில் இருந்த என் சகோதரியிடம் பேசினேன். இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பாகிஸ்தானில்கூட ஒரு மாற்றம் ஏற்படக்கூடும் என்று ஒரு கணம் நாங்கள் நம்பினோம். எங்கள் தந்தையை காத்ரி கொன்ற பிறகு 5 ஆண்டுகளாக ஒன்றன் பின் ஒன்றாகக் கொடூரமான தாக்குதல்கள் நிகழ்ந்தன. டிசம்பர் 2014-ல் பெஷாவர் பள்ளி மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 132 குழந்தைகள் கொல்லப்பட்டனர். சூழலில் மாற்றங்கள். நிறையக் கேள்விகள். ரத்த வெறி, வன்முறைப் போக்கு, தெய்வீகச் சட்டத்தின் பேரால் படுகொலை செய்பவர்களே உண்மையில் எந்தச் சட்டத்துக்கும் கட்டுப்படாதவர்களாக ஆவதை மக்கள் உணர்கிறார்களோ? இராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் அமைப்பு நிகழ்த்தும் பயங்கரங்களால் மக்களிடையே மனமாற்றம் ஏற்பட ஆரம்பிக்கிறதோ? அப்படித்தான் நான் நினைத்தேன்.
பிபிசியிலிருந்து ஒருவர் என்னைப் பேட்டியெடுத்தபோது இதைப் பற்றியெல்லாம் கேட்டார். அவ்வளவு சீக்கிரம் இதைப் பற்றிக் கருத்துச் சொல்ல முடியாது என்றாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் அரசின் கடுமையான நிலைப்பாட்டையும் மக்களின் எண்ணத்தையும் ஒன்றாக வைத்துப் பார்த்துக் குழம்பிக்கொள்ளக் கூடாது என்றேன். அடுத்த நாள், காத்ரியின் இறுதிச் சடங்கு. மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது அப்போது தெரிந்துவிடும் என்று நினைத்துக்கொண்டேன். அப்படியே தெரிந்துவிட்டது.
கிட்டத்தட்ட 1,00,000 பேர்! மாலிக் மும்தாஜ் ஹுசைன் காத்ரியின் இறுதிச்சடங்கில் அவருக்கு இறுதி வணக்கம் செலுத்துவதற்காக ராவல்பிண்டியின் தெருக்களில் திரண்டுவந்தார்கள். பாகிஸ்தானின் தேசத் தந்தை முகம்மது அலி ஜின்னா, 2007-ல் படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ போன்றோர் வரிசையில் மிகப் பெரிய கூட்டம் திரண்ட இறுதிச்சடங்கு காத்ரியுடையது. ஆனால் ஒரு வித்தியாசம், இது அரசு நடத்திய இறுதிச்சடங்கு கிடையாது. ஊடகங்கள் மூடி மறைத்தாலும் தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு பங்கேற்ற இறுதிச் சடங்கு இது
.
இதுதான் முதல் முறையா?
ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை ஆம்புலன்ஸ் ஒன்று காத்ரியின் உடலைச் சுமந்துவந்தது. அதைச் சுற்றிலும் திரண்டுவந்த மக்கள் வெள்ளத்தின் படங்கள் வெளியாக ஆரம்பித்ததும் என்னுள் சில எண்ணங்கள் எழுந்தன: தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு இந்த அளவுக்குப் பிரம்மாண்டமான இறுதிச்சடங்கு அளிக்கப்பட்டது இதுதான் முதல் முறையா? வீதிகளில் அலைகடலெனத் திரண்டு வந்தவர்கள் என் தந்தையின் மீதுள்ள வெறுப்பால் வந்தார்களா, அல்லது அவருடைய கொலையாளியின் மீதுள்ள அன்பால் வந்தார்களா? அவர்களுக்கு காத்ரியைத் தெரியவே தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தவரையில் தன் வாழ்க்கையில் காத்ரி செய்த ஒரே விஷயம் என் தந்தையைக் கொன்றதுதான். அதற்கு முன்பு காத்ரி என்பவர் யாரோ ஒருவர். அன்பின் வெளிப்பாடாக இல்லாமல் வெறுப்பின் வெளிப்பாடாக ஒரு இறுதிச்சடங்கில் இந்த அளவுக்கு மக்கள் வெள்ளம் திரண்டது இதுதான் முதல் முறையா?
இறுதியாக, வெறுப்பின் சித்தாந்தம் சவுதி-ஆதரவு முல்லாக்களிடமிருந்து வருவது மட்டுமல்லாமல், மக்கள் மத்தியிலும் தொற்றுநோய் போன்று பரவியிருக்குமெனில், என்ன நடக்கும் என்றும் நான் யோசித்துப்பார்த்தேன். கடும் போக்கை போதிக்கும் சில மசூதிகள், மதரஸாக்கள் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 20 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் தேசம் முழுவதும் இந்த வெறித்தனம் பரவுமென்றால் நாம் என்ன செய்வது?

கொல்லும் சித்தாந்தம்
என் தந்தையையும் பலரையும் கொல்வதற்குக் காரணமாக இருந்தது நம் காலத்தில் நிலவும் இஸ்லாமிய சித்தாந்தத்தின் ஒரு வடிவம். மத்திய காலத்திய போக்கைப் பின்பற்றும் வடிவம் இது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், அது மரபான சித்தாந்தம்கூடக் கிடையாது. மிகவும் நவீன வடிவம் அது: முற்றிலும் புதியது. என் தந்தையைக் கொன்றவரின் மரணத்துக்குத் துக்கம் அனுசரிக்க வந்தவர்களெல்லாம் அதற்கு முன்பு யாரும் செய்யாததைச் செய்திருக்கிறார்கள். இறந்த மனிதன் மீதுள்ள அன்பால் அல்லாமல், அந்த மனிதன் கொன்ற நபர் மீதுள்ள வெறுப்பால் உத்வேகம் பெற்றுத் திரண்டுவந்த கூட்டம் அது!
முன்னுதாரணமற்ற அந்த இறுதிச் சடங்கைப் பார்க்கும்போது ஒரு விஷயம் எனக்குத் தெளிவாகப் புரிந்தது. இஸ்லாம் மதத்தில் கடும்போக்கைப் பின்பற்றும் ஒரு பிரிவினருக்கும் நம் காலத்துக்கும் உள்ள உறவின் சிறிய அடையாளமாக ராவல்பிண்டியில் கூடிய அந்தக் கூட்டத்தை நான் காண்கிறேன். எதற்கு எதிராக அது செயல்படுகிறதோ அதனிடமிருந்தே தன் சக்தியை அந்தப் போக்கு பெற்றுக்கொள்கிறது. அதாவது, மத நிந்தனைச் சட்டத்துக்கு எதிரான தரப்பு, மேற்கத்திய சிந்தனைப் போக்கின் தாக்கம், சுதந்திரச் சிந்தனை என்று என் தந்தை பின்பற்றிய நவீனப் போக்கு, அதிலிருந்துதான் அவர்கள் தங்கள் சக்தியைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதை அடையாளம் கண்டுகொள்வதால் மாலிக் மும்தாஜ் ஹுசைன் காத்ரிக்காகத் துக்கம் அனுசரிக்க வந்த அந்த 1,00,000 பேருக்கும் மன்னிப்பு வழங்கிவிட்டதாக ஆகிவிடாது. ஆனால், அவர்களுடைய வாழ்க்கையும் நம்முடைய வாழ்க்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்பதையே அது நினைவுறுத்துகிறது.

- ஆதிஷ் தஸீர், நாவலாசிரியர்.
- C ‘நியூயார்க் டைம்ஸ்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை
tamil.thehindu.com

Friday, 25 March 2016

பாகிஸ்தான் - பயங்கரவாதத்தின் பண்ணை


ரொனால்ட் றேகனின் காலத்தில் வெள்ளை மாளிகையில் ஆப்கான் ஜிஹாத் வடிவமைக்கப்படுகிறது. முஜாஹிதீன்களுடனான அமெரிக்க ஜனாதிபதியின் கலந்துரையாடல்



80களில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ இன் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஹாமித் குல், (இடதுபக்கம்) அப்போதைய சீ.ஐ.ஏ யின் பணிப்பாளர்  வில்லியம் வெப்ஸ்ரர் , சீ.ஐ.ஏ யின் நடவடிக்கைளுக்கான உதவிப் பணிப்பாளர்  கிளயார் ஜோர்ஜ் ,சீ.ஐ.ஏ இன் பாகிஸ்தான் பெஷாவர் நிலைய முஜாஹிதீன்களுக்கான பயிற்சிக்குப் பொறுப்பான மில்ட் பெயார்டன் ஆகியோர் 1987ம் ஆண்டு பெஷாவரில் எடுத்துக்கொண்ட படம்.
**************************************************************************

"நாயோடு உறங்கியவன் அதன் ஒட்டுண்ணியோடுதான் எழுந்திருக்க வேண்டும்.''

இந்த முதுமொழி பாகிஸ்தானுக்கு சரியாகப் பொருந்துகிறது.

அமெரிக்கா என்ற பயங்கரவாதத்தோடு உறவு வைத்து அதன் ஏகாதிபத்திய நிகழ்ச்சிக்கு ஏற்ற தாளத்திற்கு ஆட்டம் போட்ட பாகிஸ்தான் இன்று ஆடிப்போய் நிற்கிறது.

அமெரிக்காவும் பாகிஸ்தானும் உருவாக்கிய அடுத்த பலிகடா! இலியாஸ் காஷ்மீரி!

(05.06. 2011 பத்ர் களத்தில் பதிவானது)


பாகிஸதானும், அமெரிக்காவும் தனது அரசியல் தேவைக்காக உருவாக்கிய அடுத்த பலிகடாவான இலியாஸ் காஷ்மீரி கொலை செய்யப்பட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்திருக்கிஙது.

ஆம் ! இலியாஸ் காஷ்மீரி அமெரிக்க உளவு விமான தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

அமெரிக்காவின் கைக்கூலியும் இஸ்லாமிய ஜிஹாதின் (?) முன்னோடியுமான பாகிஸ்தான் வழமைப் போல தனக்கு இது தொடர்பாக ஒன்றும் தெரியாது என்று கையை விரித்திருக்கிறது.

இஸ்ரேலுக்கு அடிக்கும் போது இந்த நளீமிக்கு வலிக்கிறதாம்!

(31.12. 2012 பத்ர் களத்தில் பதிவானது)



அகன்ற இஸ்ரேலுக்கு அனுசரணை வழங்கும் அல்லாஹ்வின் நேசர்கள் என்ற எனது இணையதள ஆக்கத்தை யாழ் முஸ்லிம் வலைத்தளம் பிரசுருத்திருந்தது. உண்மையில் இந்த இணையதளம் யாரால் நடாத்தப்படுகின்றது என்று எனக்கும் தெரியாது. ஆனால் அவரகள் இதனை பிரசுரித்தன் மூலம் ஒரு சர்ச்சையில் சிக்கியிருப்பதாக இன்று என்க்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பிறகே இந்த இணைய பக்கத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

கதாபியை கொன்ற தினம் அல்லாஹ்வின் தினம் - கர்ளாவி

(18.11.2011 பத்ர் களத்தில் பதிவானது)

அல்லாஹ்வின் தினமாக உச்சரிக்கப்பட்ட அமெரிக்காவின் தினம்!


முஅம்மர் அல் கதாபி கொலை செய்யப்பட்ட நாளை கத்தாரில் வாழும் கர்ளாவி அல்லாஹ்வின் தினமாக பிரகடனப்படுத்தினார்.

லிபியாவில் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளைப்பார்க்கும் போது கர்ளாவி அமெரிக்காவின் தினத்தைத் தான் வேறு வார்த்ததையில் அல்லாஹ்வின் தினம் என்று கூறியிருப்பதாக தெரிய வருகிறது.

கடந்த 17.12.2011 அன்று லிபியாவிற்கு விஐயம் செய்த அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர் லியோன் பெனெட்டா லிபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நெருங்கிய ஒத்துழைப்பு இருக்குமென்றும் லிபியாவை பாதுகாக்கும் நண்பனாக இனிமேல் அமெரிக்கா இருக்கும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அல்லாஹ்வின் தினத்தில் உதயமான லிபியாவின் விடுதலைக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்குவது பொருத்தமா?

இப்படி நீங்கள் நினைக்கலாம். கர்ளாவி போன்றவர்களுக்கு அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக அமெரிக்கா இருக்கிறது என்பதைத்தான் அந்த வார்த்தை தெளிவுபடுத்துகிறது.

கிலாபத் சிந்தனையில் கட்டிஎழுப்பப்படவிருக்கும் லிபியாவிற்கு
''நாங்கள் உங்கள் நண்பனாகவும் பங்காளியாகவும் இருப்போம் '' என்று லிபியாவின் பிரதம அமைச்சர் அப்துல் றஹீம் அல் கிப் அவர்களை நோக்கி கூறியிருக்கிறார் லியோன் பெனெட்டா .

செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இந்த அமெரிக்காவின் நிலைப்பாட்டை முன் வைத்திருக்கிறார்.

கர்ளாவியின் அமெரிக்கபா சார்பபான கிலாபத் கனவு லிபியாவிலும் நனவாகவிருக்கிறது. ஆப்கானைப் போல. 80களில் அமெரிக்காவினால் வடிவமைப்பட்ட ஆப்கான் பேராட்டம் வெற்றியடைந்த போது இதே நிலைப்பாட்டையே அமெரிக்கா கொண்டிருந்தது. தற்போதைய ஆப்கானின் நிலையை புரிந்து கொண்ட ஒருவரால் நாளை லிபியாவில் என்ன நிகழவிருக்கின்றது என்பதை அனுமானிக்க முடியும்.

லிபியாவைப் போன்றே, ரஷ்ய சார்பான ஆப்கனை வீழ்த்துவதற்கு அமெரிக்கா அரபு நாடுகளிலிருந்து இயங்கிய உளவு நிறுவனங்களினால் ஐிஹாதிய வெறி ஊட்டப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களை அரபு, முஸ்லிம், முஸ்லிம் அல்லாத நாடுகளிலிருந்து ஆப்கானுக்குள் கொண்டு சென்றது.

அகன்ற இஸ்ரேலுக்கு அனுசரணை வழங்கும் அல்லாஹ்வின் நேசர்கள்!


இந்தத் தலைப்பு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? இல்லாவிட்டால் ஆத்திரமாக இருக்கிறதா?

இஸ்ரேல் அதன் கொள்கையிலுள்ள 'அகன்ற இஸ்ரேல்' என்று சொல்லக் கூடிய,  மக்கா மதீனா புனித ஸ்தலங்களை உள்ளடக்கிய ஓர் அகன்ற இஸ்ரேல் இராஜ்யத்தை மத்திய கிழக்கில் உருவாக்கும் கருத்திட்டத்தை மையமாக வைத்து செயலாற்றி வருகின்றது.


இஸ்ரேலின் விரோதிகளான முஸ்லிம்கள் இதற்கு ஆதரவு அளிப்பதா?
அது நடக்கவே நடக்காது! என்று நீங்கள் என்னோடு சண்டைக்கு வரலாம்.

ஆனால் எங்களையறியாமல் அது நடக்கின்றது. எங்களையறியாமல் நாம் சிலரால் அந்த இலக்கை நோக்கி வழி நடாத்தப்படுகின்றோம்.
அது எப்படி என்பதை சுட்டிக்காட்டுவதே இந்தப் பதிவின் நோக்கம் .

அரசியல்,கட்சி,  இயக்கம், ஜமாத்து, பிளவுகள் , பிரிவுகள் என்ற முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்காமல் அதிலிருந்து வெளியே வந்து சுதந்திரமாக சிந்தித்தால் இந்த உண்மையை உங்களால் உணர முடியும்.

ஆப்கானிஸ்தான், ஈராக்... லிபியா அடுத்த படியாக...சிரியா .. ஈரான்..!

அரபுலகின் பூரண ஆதரவோடு , இஸ்லாம் விரோத மேற்குலக அணியான நேட்டோவின் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் லிபியாவின் தலையெழுத்தும் மாற்றப்பட்டு விட்டது.

லிபியாவில் அமெரிக்கப் பிரஜையான, சீஐஏயின் வாரிசான மஹ்மூத் ஜிப்ரீல் லிபியாவின் காப்பாளராக நியமிக்கப்பட்டும் இருக்கின்றார். அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட ஜிப்ரீல் இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இனி  ஒருபோதும் இருக்கமாட்டார்.

இனி, இஸ்ரேலின் வாக்களிக்கப்பட்ட 'அகன்ற இஸ்ரேல்' என்ற வாதத்திற்கும், அமெரிக்காவின் எண்ணெய் கொள்ளையிடலுக்கும் அடுத்த தடையாக இருப்பவை சிரியாவும் ஈரானும்தான். இந்த இரண்டு தடைகளையும் தகர்க்க வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருக்கிறது.

நேட்டோவின் அடுத்த இலக்கு சிரியாவையும் ஈரானையும் நோக்கி திரும்பும் என்பதில் சந்தேகமேயில்லை.

இப்போது அந்தக் களத்தையும், தளத்தையும் அமைக்கின்ற பணியில் "இஸ்ரேலிய, அமெரிக்க, அரபு முக்கூட்டு லொபி" (Lobby) கச்சிதமாக இயங்க ஆரம்பித்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான் யுத்தத்தின் போது இந்த முக்கூட்டு லொபி ஜிஹாதை ஜனரஞ்சகப் படுத்தி கம்யூனிஸம் தொடர்பான மிக மோசமான கருத்தாடலை மக்கள் மயப்படுத்தியது.

ஓர் இணைபிரியாத இயங்கு நிலையைக் கொண்ட அமெரிக்க முதலாளியத்திற்கும், அரபு வஹாபிஸத்திற்கும் உள்ள உறவு,  இந்த இரு சக்திகளுக்கும் ஊடகங்களில் உள்ள ஆதிக்கம் இக்கருத்தை உலக ரீதியில் மக்கள் மயப்படுத்துவதில் வெற்றியளித்து வருகிறது.

ஜிஹாத் என்ற சொல்லாடலை வெள்ளை மாளிகையின் வெறுப்பிற்கு ஆளானோர் மீது தொடுக்கப்படுகின்ற தூய போராட்டமாக அரபு வஹாபிஸம் அர்த்தப்படுத்தி காட்டி வருகிறது. தேவையான போது மாற்றமான கருத்து பெறும் இந்த ஜிஹாத் சொல்லாடல், அமெரிக்காவிற்கு எதிராக இருந்த லிபியாவிற்கு ஒரு விதமாகவும், அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கும் பஹ்ரைனுக்கு இன்னொரு விதமாகவும் அர்த்தப்படுவதை அவதானிக்க முடியும்.

இன்று நேரடியாக அமெரிக்காவையும், மறைமுகமாக இஸ்ரேலையும் ஆதரிக்கின்ற மத்திய கிழக்கின் வஹாபிய அரபு ராஜாக்களின் அரசியல் தலைமைத்துவங்கள்,  அடுத்த கட்டமாக சிரியா, ஈரான் இரண்டு நாடுகளுக்கும் எதிராக தனது பிரசார வியூகத்தை இப்போதே ஆரம்பித்திருக்கின்றன.

உலகம் பூராவும் இயங்குகின்ற, அரபுகளின் பெற்றோல் டொலர்களால் உயிர்வாழும், பிற்போக்குவாதிகளால் போஷிக்கப்படுகின்ற இயக்கங்களான தனது "ஏஜன்ட்"களை வைத்து இந்த அரபு அரசியல் தளம் சிரியாவிற்கும், ஈரானுக்கும் எதிராக பிரசார நடவடிக்கைகளை இயங்கு நிலையில் வைத்திருக்கிறது.  இது இந்த தீய சக்திகளின் பிரசார யுத்த நடவடிக்கையாகும்.

இராணுவ நடவடிக்கையாக லிபியாவில் கதாபிக்கு எதிராக போர்தொடுத்த அல்காயிதா உறுப்பினர்களையும், ஏனைய பிறநாட்டு ஜிஹாதிய கூலிப்படைகளையும், அமெரிக்க சீ.ஐ.ஏ உளவு நிறுவனம் சிரியாவிற்குள் நகர்த்தி வருவதாக அமெரிக்க எப்.பி.ஐ. உளவு பிரிவில் துருக்கிய மொழி பெயர்ப்பாளராககடமையாற்றிய சீபல் எட்மன்ட்  Russia Today (RT) தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கின்றார்.

துருக்கி சிரிய எல்லையில் நேட்டோ படையின் முக்கிய புள்ளிகளால் இவர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அறிய வருகிறது.

தற்போதைய லிபியாவின்,  திரிப்போலியின் இராணுவ கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் இருக்கும் அல்காயிதாவின் லிபியத் தலைவரான இருந்த ஹாகிம் பில் ஹஜ் தற்போது சிரியாவிற்குள் புகுந்திருப்பதாகவும் ஏனைய அரபு நாடுகளிலிருந்து போராட்டக்காரர்களை சிரியாவிற்கு கொண்டு வரும் வேலையை ஹாகிம் பில் ஹஜ்ஜோடு இணைந்து சீஐஏ திட்டமிட்டு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுவரும் நேட்டோவின் தலைமையிலான இந்த அகன்ற இஸ்ரேலுக்குக்கான அமெரிக்க அக்கிரமிப்பிற்கு அரபு லீக் என்ற பொம்மைக் கூட்டம் அனுசரணை வழங்கியும் வருகிறது.

கடந்த திங்கட் கிழமை டமஸ்கஸ்ஸில் சிரியா விவகாரம் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

அமெரிக்க அனுசரணையில் அரபு லீக் தயாரித்துள்ள இந்நத ஒப்பந்தத்தில் சிரியாவிற்குள் சென்று அரபு லீக் உறுப்பினர்கள் சிரிய நிலைமைகளை அவதானிக்க முடியும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் இடம்பெறுவதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை அவதானிக்கும் பொறுப்பை பெற்றுக் கொள்வதில் அரபு லீக் காட்டும் ஆர்வத்தின் பின்னணியில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலே இருக்கிறது.

கடந்த கால வரலாற்றை கொஞ்சம் மீட்டிப்பாருங்கள்.
அமெரிக்க,  இஸ்ரேலிய படைகளால் பலஸ்தீனிலும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மெய் சிலிர்க்கின்ற மனித உரிமை மீறல்கள் நிகழும் போது எவ்வித கரிசனையும் காட்டாத இந்த அமெரிக்க பொம்மைகளான அரபு லீக், சிரிய விவகாரத்தில் மாத்திரம் "சீரியஸாக" சிந்திப்பது சீஐஏயின் வழிகாட்டலில்தான் என்பது தெளிவாக தெரிகின்றது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசியல் நலன் காக்கின்ற உளவாளிகளுக்கு இலகுவாக சிரியாவிற்குள் நுழைகின்ற அனுமதி கிடைத்திருக்கின்றது.

உண்மையை திரிபுபடுத்தும் மேற்குலகின் ஊடகங்களுக்கும் இந்த ஒப்பந்தம் ஒரு வரப்பிரசாதமாகும்.  இஸ்ரேல், பிரித்தானியா மற்றும் அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் அரபு எண்ணெய் 'ஷெய்க்கு'களின் ஊதுகுழலான அல் ஜஸீராவும் சிரியாவின் மீது நேட்டோ தாக்குதல் ஒன்றிற்கான நியாயத்தை ஏற்படுத்தும் பக்கச்சார்பான செய்திகளை திட்டமிட்டு பரப்பி, உளவியல் ரீதியிலான ஒரு யுத்தத்தை நடாத்தி வருகின்றன.

இஸ்ரேலுக்கு மிகவும் விசுவாசமான, கத்தார் மன்னரின் ஆஸ்த்தான முப்தியான கர்ளாவியும் சிரியாவின் மீது நேட்டோவின் காருண்ய படை கால் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றார்.


ஆனால், சிரியாவின் வன்முறையை முடிவிற்குக் கொண்டு வர அந்நாட்டின் மீது தொடுக்கப்பட தயாராகியிருக்கும் அமெரிக்க ஆதரவிலான படை நடவடிக்கையை ஐநா சபையில் ரஷ்யா கண்டித்திருக்கிறது.

லிபியாவின் பாணியில் சிரியாவை அமெரிக்காவிற்கு தாரை வார்த்துக் கொடுக்கும் இஸ்ரேல் அமெரிக்க நட்பாளர்களான சவூதி, கத்தார், குவைத் அரபு நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஓர்அச்சுறுத்தலாக ரஷ்யாவின் கோரிக்கை அமைந்திருக்கிறது.

ரஷ்யாவின் பிரபல அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் இகோர் பெனரின்  Professor Igor Panarin இஸ்ரேல் பிரித்தானிய அமெரிக்க ஆதரவு சக்திகள் சிரியாவின் உள்நாட்டுப் பிரச்சினையில் பெரும் பங்காற்றி வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். 


அரபு லீக்கிலிருந்த சிரியாவை தள்ளிவைத்தல் தீர்மானம்  முற்றாக இஸ்ரேலின் தேவைக் கருதி கொண்டுவரப்பட்ட ஒன்று எனவும் அவர் கூறியிருக்கின்றார்.

இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டின் பாதுகாவலராய் இருக்கும் அமெரிக்க முதலாளியம் தான், சவூதி அரேபிய வஹாபிஸத்தின் பாதுகாவலராய் இருக்கின்றது. 

சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்காதான் மத்திய கிழக்கின் இரு பெரும் சக்திகளான சவூதியையும், இஸ்ரேலையும் பாதுகாக்கிறது. எனவே சவூதியால் பணம் வழங்கி பாதுகாக்கப்படுகின்ற ''இஸ்லாமிய வாதி(?)'' களுக்கு இஸ்ரேலைப் பாதுகாக்கின்ற நிர்ப்பந்தங்கள் (மறைமுகமாக) நிறையவே இருக்கின்றன. இதனை யாராலும் மறுக்க முடியாது.


இந்த அடிப்படையில் தான் கர்ளாவியின் பத்வாக்கள் அமெரிக்க முதலாளியத்தினதும் அரபு வஹாபிஸத்தினதும் அரசியல் திருப்திக்கு ஏற்றவாறு வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

இஸ்ரேலை அமெரிக்கா நேசிக்கிறது. அமெரிக்காவை அரபு நாடுகள் நேசிக்கின்றன. அரபு நாடுகளை இஸ்லாமிய வாதிகள் (?) நேசிக்கின்றார்கள்.
உறவில் இவர்கள் ஓரணியில்தான். இலக்கில் மட்டும் எப்படி வித்திசாப்படுவார்கள்???.

எல்லோரினதும் இலக்கு ஒன்றுதான்.

அதுதான் மத்திய கிழக்கு முழுவதையும் ஒன்றிணைத்த அகன்ற இஸ்ரேல்!
அது அமைய தடையாக இருப்பவர்களை தட்டி வீழ்த்துவது தான் அமெரிக்க ஜிஹாத்!

ஆப்கானிஸ்தான்...ஈராக்...லிபியா விடயத்தில் இஸ்ரேலின் கனவு நனவாகிவிட்டது. இனி சிரியாவும் ஈரானும் தான்.!

எங்கே? இஸ்லாமியவாதிகளே! (?) 80களில் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப் படையை விரட்டி அந்த பூமியை அமெரிக்காவிற்கு பெற்றுக்கொடுக்க அன்று போட்ட அந்த பழைய கோஷங்களை மீண்டும் முழங்குவோமே!
ஸபீலுனா... ஸபீலுனா... அல் (அமெரிக்கா) ஜிஹாத்!  
அல் (அமெரிக்கா) ஜிஹாத்!

(பத்ர் களத்தில் பதிவிட்டது 24.12.2011)

அப்துல் ஹாகிம் பில் ஹஜ் - பயங்கரவாதி + போராளி ?


(பத்ர் களத்தில் பதிவிட்டது  29.12.2011)

தேவையான போது அரவணைப்பது, தேவையில்லாத போது அழிப்பது,
இதுதான் வெள்ளை மாளிகையின் வெளியுறவுக் கொள்கை!

தனது ஆதிக்க அரசியலை நிலைநாட்டுவதற்காக ஜிஹாத் என்ற போலி முலாம் பூசி, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை தோற்றுவித்தது.
 .
அல்காயிதாவையும் ஏனைய போராட்ட இயக்கங்களையும் பாலூட்டி வளர்த்த அது,  ஹமீத் கர்ஸாயி என்ற தனது கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பொம்மை ஒன்றின் தலைமையில்அந்த நாட்டைக் கொண்டு வந்திருக்கிறது.

ஆப்கானை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போராடிய, தன்னால் பாலூட்டி வளர்க்கப்பட்ட அல்காயிதா உட்பட அனைத்து அமைப்புகளினதும் குரல்வளையை அமெரிக்கா அதன் கைகளாலேயே நெரித்தது.

ஆப்கானின் போராட்டத்திற்காக பாகிஸ்தானின் பெஷாவரை பயங்கரவாதத்தின் பண்ணையாக மாற்றியது.

உலக நாடுகளிலிருந்து (முஸ்லிம், முஸ்லிம் அல்லாத நாடுகளிலிருந்து)  முஸ்லிம் இளைஞர்களை இந்த ஜிஹாதிய முலாம் பூசிய கூலிப்படைக்காக அணி திரடடுவதில் அரபு நாட்டு உளவு நிறுவனங்களுடன் சேர்ந்து இஸ்லாமிய அமைப்புகளும் அன்று அயராது உழைத்தன.

இந்த ஆப்கான் போரும் அதன் பின்விளைவுகளுமே சமகால உலக அரசியலில் தலை கீழான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த போரின் பின் விளைவே இன்று அமெரிக்க ஏகாதிபத்தித்தின் கையை ஓங்கச் செய்திருக்கிறது.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் இராணுவ அக்கிரமிப்பிற்கும் ஓர் உந்து சக்தியாக இந்தப்போரே அமைந்தது.  பிற்காலத்தில் இந்தப் போரினால் உருவாக்கப்பட்ட கதாநாயகர்களைின் பெயர்களை வைத்துக்கொண்டே பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டு அமெரிக்காவால் அரபு நாடுகளை ஆக்கிரமிக்க முடிந்தது.

அது மட்டுமல்ல,

அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு அரசியலை நிலை நாட்டுவதற்காக, 80களில் பாகிஸ்தான் தீவிரவாதத்தின் தொட்டிலாக மாற்றப்பட்டது. இந்த விளைவின் பாதிப்பை பாகிஸ்தானை இன்று உணருகின்றது. உலக பயங்கரவாதத்தின் ஒரு குறியீடாக அது மாற்றம் பெறுவதற்கு ஆப்கான் போரே அடிப்படை காரணமானது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழி பாகிஸ்தானுக்கு இன்று சரியாக பொருந்திப் போகிறது.

வேறு ஒரு நாட்டின் அரசியல் தேவைக்காக விதைத்த பயங்கரவாதத்தை பாகிஸ்தான் இப்போது அறுவடை செய்துக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்தை அரசியல் பாலாக ஊட்டிய அமெரிக்கா அதன் கைகளாலேயே இன்று பாகிஸ்தானை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவால் எந்த நேரத்திலும் எதுவும் செய்ய முடியுமான ஓர் இறைமையற்ற ஒரு நாடாக உலக பந்தில் அது உருமாறியிருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் 'வெளியுறவு' அரசியல் அகராதியில் நீண்ட நாள் நண்பனுமில்லை, நீண்ட நாள் எதிரியுமில்லை என்ற நியதி நேர்த்தியாக பின்பற்றப்படுகிறது. பாகிஸ்தானின் இந்த ஜிஹாதிய பண்ணையில் உருவான உஸாமா பின் லாதின் முதல் லிபியாவின் ஹாகிம் பில் ஹஜ் வரை எப்படி அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியல் காய் நகர்த்தலுக்காக எப்படி பயன்படுத்தப் படுகின்றார்கள் என்பதை நாம் கட்டாயம் உணர்ந்தே ஆக வேண்டும்.

இப்போது அப்துல் ஹாகிம் பில் ஹஜ் விவகாரத்திற்கு வருவோம்.

யார் இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ்?

கதாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு திரிப்போலியின் இராணுவ தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இந்த பில் ஹஜ் லிபியாவின் அல்காயிதா அமைப்பின் தற்போதைய தலைவர். இவர் 1966ம் ஆண்டு  திரிப்பொலியில் பிறந்தவர்.

அல்காயிதா அமைப்பின் முக்கிய உறுப்பினராக அறியப்பட்ட இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ். ஆப்கான் போராட்டத்திற்காக பாகிஸ்தான் பெஷாவரைத் தளமாகக் கொண்டு இயங்கிய “ஜிஹாதிய பண்ணையில்” அமெரிக்கா சீஐஏ இனால் வளர்க்கப்பட்ட ஒரு போராளி.

80களில் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப் படையை விரட்டுவதற்காக வேண்டி சவூதி அரேபிய நிதி மூலங்களால் நிர்வகிப்பபட்டுகின்ற, இஸ்லாமிய அமைப்புகளினால் பிரகடனப்படுத்தப்பட்ட, ரஷ்யாவிற்கு எதிரான 'ஜிஹாத்' போராட்டத்திற்கு பலிக்கடாவாய் லிபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவர்தான் இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ் .

சவுதி முதலாளியத்தின் அடையாளமாகவும், பன்முகத்தன்மை கொண்ட வர்த்தகத்தின் பெரு விருட்ஷமாகவும், அமெரிக்க ஜனாதிபதிகளான புஷ் குடும்பத்தின் நெருங்கிய சகாவாகவும் இருந்த பின் லாதீன் குடும்பத்தின் “போராளி“ யான  ஒசாமா பின் லாதீனுக்கும் அப்துல் ஹாகிம் பில் ஹஜ்ஜுக்கும் இடையில் தொடர்பு பாகிஸ்தானில் தான் ஏற்பட்டது.

இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள , அல்காயிதாவுடன் தொடா்புடைய  Libyan Islamic Fighting Group (LIFG)  லிபிய இஸ்லாமிய போராட்டக் குழுவின் தலைவராவார்.

அமெரிக்காவின் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் வரிசையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அடுத்ததாக 28 வது வரிசையில் அப்துல் ஹாகிம் பில் ஹஜ் உடைய லிபிய போராட்டக்குழுவின் Libyan Islamic Fighting Group (LIFG)  பெயரே குறிக்கப்பட்டு இருக்கிறது.

தன்னால் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் தலைவரை, லிபிய போராட்டத்தில் முன்னணி வீரனாக, கர்த்தாவாக, வைத்து இன்று அமெரிக்க, மேற்கின் ஊடகங்கள் புகழ்ந்து பாராட்டி வருகின்றன.

வேடிக்கை என்னவென்றால் ஆப்கானிஸ்தானில் அல்காயிதாவிற்கு எதிராக யுத்தம் செய்கின்ற நேட்டோ படை. லிபியாவில் அல்காயிதாவோடு இணைந்து கதாபிக்கு எதிராக யுத்தம் செய்ததுதான்.

இதிலிருந்து அல்காயிதா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு ஒரு போலி அரசியல் நாடகம் என்பது தெளிவாகப் புரிகின்றது.

சதாம் ஹுஸைனுக்கும், கதாபிக்கும் எதிராக அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டி வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தே அந்நாடுகளுக்கான ஆக்கிரமிப்பை ஐ.நா சபையும் நியாயப்படுத்தியது.

ஆனால் அல்காயிதா என்ற அமைப்பிற்கும் சதாம் ஹுஸைனுக்கோ, லிபிய  தலைவா் முஅம்மா் அல் கதாபிக்கோ எவ்வித உறவும் இருந்தில்லை. எதிரும் புதிருமான அரசியல் தளங்களைக் கொண்ட இவா்களை ஒன்றிணைத்து முடிச்சுப் போடுவதில் மேற்குலக ஊடகங்கள் வெற்றி கண்டன.

சதாமும், கதாபியும் அல்காயிதா அமைப்பின் பரம எதிரிகளாவர். அமெரிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலின் தேவைக்காக உருவாக்கப்பட்டஇந்த அமைப்புகளை அழிக்கின்ற, ஒடுக்குகின்ற ஒரு அரசியல் நிலைப்பாட்டிலேயே கடந்த காலங்களில் சதாமும், கதாபியும்  இருந்திருக்கின்றார்கள்.

அல்காயிதாவோடு தொடா்பு வைத்திருப்பதாய் யாரையெல்லாம் அமெரிக்கா குற்றம் சாட்டியதோ, அவா்களை வீழ்த்துவதற்கு இன்று அல்கைதாவையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகின்ற ஓர் அவல அரசியலை அது செயற்படுத்தி வருகின்றது.

இன்றைய சமகால நிகழ்வுகளைப் பார்க்கும் போது அல்காயிதாவுக்கும்  அமெரிக்காவிற்கும் உள்ள உறவே அம்பலமாகி வருகின்றது.

அப்துல் ஹாகிம் பில் ஹஜ் ஆப்கானின் போராட்டத்தின் பின்னர் அதே நிகழ்ச்சி நிரலோடு லிபியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  லிபியாவில் அல்காயிதாவின் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அமெரிக்காவோடு முறுகல் நிலையிலிருந்த கதாபிக்கு எதிரான போராட்டத்தை இவர் ஆரம்பித்தார். மூன்று தடவை கதாபியை கொல்ல இவர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

அல்காயிதாவை கடுமையான முறையில் அடக்குவதற்கு கதாபி முடிவெடுத்தார். கதாபியின் கடுமையான நெருக்குதல் காரணமாக அல்காயிதா உறுப்பினர்கள் லிபியாவை விட்டு வெளியேறி, அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

அப்துல் ஹாகிம் பில் ஹஜ் 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரசியல் தஞ்சமடைவதற்காக பிரித்தானியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்த போது மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு அமெரிக்க உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ. இடமும், பிரித்தானிய உளவு நிறுவனமான எம். 16 இடமும் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த இரண்டு உளவு நிறுவனங்களும் பில் ஹஜ்ஜை லிபியாவிடம் ஒப்படைத்தது. லிபியாவில் மூன்று நாட்டு உளவாளிகளினாலும் பலத்த சித்திர வதைகளுக்கு ஆளானதாக அண்மையில் இவரே ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் இருக்கும் அல்கைாயிதா உறுப்பினர்களை காட்டிக்கொடுக்குமாறு லிபியாவின் உளவுத் துறை தலைவரான தற்போது பிரித்தானியாவில் இருக்கும் மூஸா கூஸா தன்னிடம் வேண்டியதாகவும், அப்படிக் கூறும் பட்சத்தில் தனக்கு சித்திரவதைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று அவருக்குக் கூறப்பட்டதாகவும் அப்துல் ஹாகிம் பில் ஹஜ் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

பல ஆண்டுகள் லிபிய சிறையிலிருந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ், 2010ம் ஆண்டு மார்ச் மாதம் கதாபியின் மகன் சைபுல் இஸ்லாம் 700 அல்கைதா உறுப்பினர்களை சிறையிலிருந்து விடுதலை செய்தார். அதில் இந்த ஹாகிம் பில் ஹஜ்ஜும் ஒருவர்.  விடுதலையின் பின்னர் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தமது விடுதலைக்கு ஒத்துழைத்த கதாபியின் மகன் சைபுல் இஸ்லாத்திற்கு நன்றி பாராட்டுவதாக கூறினார்.

இது தொடர்பாக சைபுல் இஸ்லாமும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது “  இந்த அல்கைதா அங்கத்தவர்களால் இனியும் நாட்டிற்கு தீங்கு கிடையாது என்று தாம் நம்புவதால் அவர்களை விடுதலை செய்ததாக அறிவித்தார்.

ஆனால் இவர்களின் விடுதலையின் சுமார் ஒரு வருடங்களின் பின்னர் லிபியாவின் தலையெழுத்தையே மாற்றுவதாய் இந்நிகழ்வு அமையும் என்று கதாபியோ, அவரின் மகன் சைபுல் இஸ்லாமோ கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

கடந்த வருடம் மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சியொடு எழுந்தக்கொண்ட இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ் திரிப்பொலியில் கதாபிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை மெதுவாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

அமெரிக்காவினால் பயங்கரவாதியாக லிபியாவிற்கு பிடித்துக் கொடுக்கப்பட்ட அதே அப்துல் ஹாகிம் பில் ஹஜ்ஜை வைத்து லிபிய போராட்டத்தை மேற்குலகு மக்கள் மயப்படுத்தியது. தனது நிகழ்ச்சி நிரலில் பயங்கரவாதியாக இருந்த இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ்ஜை சுதந்திர போராளியாக மேற்கின் ஊடகங்கள் சித்தரித்துக் காட்டின.

மக்கள் எழுச்சியை தனது வழமையான அடக்குமுறை அணுகுமுறையால் நசுக்க முயன்ற கதாபிக்கு எதிராக தருணம் பார்த்து மேற்குலக நாடுகள் தடைகளை விதித்தன.   நேட்டோவின் வான் படைத்தாக்குதல்களைத் தொடுத்தன. இந்த நேட்டோவின் உதவியின் மூலம் திரிப்போலியைக் இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ் கைப்பினார்.

லிபியாவின் வீழ்ச்சிக்கு மேற்குலகின் உதவியும், அல்கைதா உறுப்பினர்களினது போராட்டமும் காரணமாக அமைந்தன.  பலஸ்தீன் பூமியை அபகரித்த இஸ்ரேலுக்குக் காட்டாத எதிர்ப்பை கதாபிக்கு காட்டும் அளவிற்கு முஸ்லிம்கள் மேற்குலக ஊடகங்களினாலும் எகாதிபத்தியத்தின் எடுபிடிகளாலும் மூளைச் சலவை செய்யப்பட்டார்கள்.

கதாபியின் சர்வாதிகார தன்மைக்கு ஒத்த அடக்குமுறையாளர்கள் மத்திய கிழக்கில் நிறைய பேர் இருக்கும் நிலையில் கதாபியை மட்டும் கொடுமைக்காரராக சித்தரிக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் சதி வலையில் முஸ்லிம்கள் சிக்கவைக்கப்பட்டார்கள்.



அப்துல் ஹாகிம் பில் ஹஜ் இப்போது அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் லிபியாவின் ஒரு விடுதலைப் போராளி!   நாளை...?